தொழிலாளியை மிரட்டிய நிதி நிறுவன ஊழியர் கைது
வட்டி தொகை கட்டவில்லை என தொழிலாளியை மிரட்டிய பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்
பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். தொழிலாளியான இவர் பள்ளிப்பாளையத்தில் செயல்படும் ஸ்ரீ ஆதிரா பைனான்ஸ் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த மே மாதம் 6 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக வாரம் தோறும் வட்டி கட்ட வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தர்மராஜ் வட்டி கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து நிதி நிறுவனத்தில் வேலை செய்யும் கார்த்திக் என்பவர் தர்மராஜை ஆபாச வார்த்தைகளால் மிரட்டி ,கன்னத்தில் அறைந்தும், வயிற்றில் கையால் குத்தியும் பணத்தை கட்டாவிட்டால் கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அவரை தாக்கி உள்ளார் . இது குறித்து தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ,சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை பள்ளிபாளையத்தில் நடத்தினர் . இதனை அடுத்து நிதி நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்