பார்த்திபபுரம் கோவிலில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

60 பெண்கள் உட்பட 230 பேர் மீது வழக்கு பதிவு

Update: 2024-11-16 15:01 GMT
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் பிரசித்தி பெற்ற  பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை , மற்றும் வெள்ளி கவசங்கள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.        கொள்ளையடித்த நபர்களை உடனடி கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை பார்த்திபபுரம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் மிசா சோமன், மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார், குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், முன்னாள் பைங்குளம் ஊராட்சி தலைவர் சந்திரகுமார், முஞ்சிறை ஒன்றிய பாரதிய ஜனதா தலைவர் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு புதுக்கடை போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியை மீறி போராட்டம் நடத்திய தாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் அரசு உத்தரவை மீறி, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும்  இடையூறு ஏற்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 230 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News