ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை

ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் பௌர்ணமி சிறப்பு பூஜை

Update: 2024-11-16 14:56 GMT
நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் அடுத்த பொன்குறிச்சியில் அமைந்துள்ள சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரி ஆலயத்தில் பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. சிறப்புமிக்க பூஜையில் ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னத்தை பக்தர்கள் அனைவரும் கிணற்றில் உள்ள மீனுக்கு உணவாக கொடுத்தார்கள். மேலும் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News