அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம் அறியதுறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கணபதி லட்சுமி நவக்கிரக பூஜைகளுடன் யாகசாலை பூஜை நடைபெற்றது பின்னர் கலசநீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கோபுர காலங்களுக்கும் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் கலச நீரானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் பொன்னேரி கவரப்பேட்டை கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.