மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது

பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்

Update: 2024-08-28 13:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் கிராமத்தில் 11.09.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அயன்பேரையூர் கிராமத்தில், எதிர் வரும் 11.09.2024 (புதன் கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, அயன்பேரையூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அயன்பேரையூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும் நாளிற்கு முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Similar News