வழக்கறிஞர் சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாநகராட்சி முன்பாக மனித சங்கிலி போராட்டம் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
மத்திய அரசு தற்பொழுது குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து புதிய முப்பெரும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் இன்று திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் குமரேசன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் ஆனது நடைபெற்றது. செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, இணைச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.