போகித் திருநாள் முனீஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம்.
திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மோட்லூர் ஏரி பகுதியில் அருள்மிகு முனீஸ்வரன் ஆலயத்தில் இன்று போகி திருநாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் குல தெய்வமான முனீஸ்வரனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். போகித் திருநாளை முன்னிட்டு அதி காலை முதலே முனீஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.