ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா

குமரி

Update: 2025-01-14 09:41 GMT
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழா
  • whatsapp icon
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சி  அலுவலகத்தில் வைத்து, ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவரும், அதிமுக தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளருமான முத்துக்குமார் தலைமையில் 18 கவுன்சிலர்கள் இணைந்து 18 பொங்க பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி இன்று 14-ம் தேதி நடைபெற்றது.         இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கழக செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம்  கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி பொங்கல் அடுப்பில் தீ மூட்டி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் 5கிலோ அரிசி, கரும்பு, பொங்கல்படி உள்ளிட்ட தொகுப்பை எம்எல்ஏ தளவாய்சுந்தரம் வழங்கினார்.         இதில் மாவட்ட அதிமுக கழக இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாவட்ட இளைஞர் இளம்பண்கள் பாசறை செயலாளரும், அதிமுக மாமன்ற உறுப்பினருமான அக்ஷயா கண்ணன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ரபீக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News