செங்கோட்டை, ஆய்க்குடி, தெற்குமேடு பகுதிகளில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
தெற்குமேடு பகுதிகளில் எம்ஜிஆா் பிறந்தநாள் விழா
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர அதிமுக சாா்பில், வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் தங்கவேலு, நகர துணைச் செயலா் பூசைராஜ் உளபட பலா் கலந்துகொண்டனா். செங்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட புளியறை, தெற்குமேடு பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு, ஒன்றியச் செயலா் சசீகரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கொடியேற்றி இனிப்புகள வழங்கினாா். ஆய்க்குடி பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி துணைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஆய்க்குடி செல்லப்பன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.