பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி நிறைவு

மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி

Update: 2025-01-18 04:21 GMT
விழுப்புரத்தில் சக்ஷம் அமைப்பின் சார்பில், தெய்வனை அம்மாள் மகளிர் கல்லூரில், பார்வை மாற்றுதிறனாளிகளுக்கான மாநில அளவிலான சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆஷ்ரமம் விவேகானந்தா சேவா பிரிதிஷ்டானின் இயக்குநர் யதீஸ்வரி அத்மா விகாஷா பிரியா அம்பா சிறப்புரையாற்றினார்.விழாவில் சக்ஷம் மாவட்ட தலைவர் செந்தில்குமார், அரசு கல்லூரி பேராசிரியர் தமிழரசி, சக்ஷம் மாநில தலைவர் சுபாஷ்ராஜ், மாவட்ட செயலாளர் ரமேஷ், இணை செயலாளர் பொற்செல்வி, பொருளாளர் பிரபாவதி வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துகொண்டனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. சதீஷ் நன்றி கூறினார்.

Similar News