கள்ளக்குறிச்சி:TVK சார்பில் வேலு நாச்சியார் நினைவு நாள் அனுசரிப்பு....

கள்ளக்குறிச்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் வேலு நாச்சியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட கழக செயலாளர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது;

Update: 2025-12-25 08:14 GMT
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களின் திருவுருவ படத்திற்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.K.பிரகாஷ் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.! மேலும் இந்நிகழ்ச்சியில் திரு.M.ராமு மாவட்ட கழக இணைச் செயலாளர் திரு.M.ஜவகர் மாவட்ட கழக பொருளாளர், திருமதி.M.கனிமொழி மாவட்ட கழக துணைச் செயலாளர் மற்றும் (கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி) மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், பேரூர், வார்டு,கிளைக் கழக தோழர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.!

Similar News