கரூரில்,முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர்.
கரூரில்,முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர்.;
கரூரில்,முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளை கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர். ஒரு பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை துவக்கிய திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் ஒரு மக்கள் தலைவர், பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். அக்டோபர் 13, 1999 அன்று 2-வது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் அரசியல் காலம் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. அவர் ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் வாஜ்பாயிக்கு பெரிய பங்கு உண்டு. அத்தகைய உயரிய குணங்கள் மற்றும் ஆளுமை கொண்ட வாஜ்பாயின் 101 வது பிறந்த நாளில் நாடெங்கும் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இதன் அடிப்படையில் கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது திரு உருவப்படத்திற்கு கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி அடல் பிகாரி வாஜ்பாயின் சாதனைகளை கூறி வாழ்த்தி கோஷமிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாளை கொண்டாடினர்.