செஞ்சியில் திடீர் சாலை மறியல்

திடீர் சாலை மறியல்

Update: 2025-01-18 04:17 GMT
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை அ.தி.மு.க.,வினரும், ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த அ.தி.மு.க., உரிமை மீட்பு குழுவினரும் நேற்று செஞ்சி கூட்ரோட்டில் விழுப்புரம் சாலை திருப்பத்தில் ஒரே இடத்தில் கொண்டாடினர்.இரு தரப்பினரும் ஒரே இடத்தில் அனுமதி கேட்டதால் காலை 7 மணி முதல் 9 மணிவரை அ.தி.மு.க.,வினரும், 9 மணியில் இருந்து 11 மணிவரை உரிமை மீட்பு குழுவுக்கும் போலீசார் அனுமதி அளித்திருந்தனர்.அ.தி.மு.க.,வினர் 9 மணிக்கு பிறகு அலங்கார பந்தலை அகற்ற வேண்டும் என போலீசார் கூறியிருந்தனர். காலை 11.10 மணிக்கு உரிமை மீட்பு குழு சார்பில் நலத்திட்டம் வழங்க வந்த மாவட்ட செயலாளர் ஏழுமலை அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த பந்தல் அகற்றாமல் இருந்தை கண்டித்து, நிர்வாகிகளுடன் 11.20 மணிக்கு செஞ்சி நான்கு முனை ரோட்டில் திடீரென மறியல் செய்தார்.சம்பவ இடத்திற்கு வந்திருந்த இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் ஏழுமலையிடம் பேச்சு வார்த்தை நடத்தியதின் பேரில் அ.தி.மு.க.,வினர் அமைத்திருந்த பந்தலை போலீசார் அகற்றினர்.இதையடுத்து உரிமை மீட்பு குழுவினர் 11.35 மணிக்கு மறியலை கைவிட்டனர்.

Similar News