கிளியனூர் அருகே காரில் மது கடத்திய மூன்று வாலிபர்கள் கைது
காரில் மது கடத்திய மூன்று வாலிபர்கள் கைது
கிளியனூர் போலீசார் நேற்று பிற்பகல் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பில், புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற ஸ்விப்ட் காரை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர்.அதில், புதுச்சேரியில் இருந்து மது கடத்தி சென்றது தெரிய வந்தது. அதன் பேரில் பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த துக்கபேட்டையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரசாந்த், 27; காளிதாஸ் மகன் அவினாஷ், 31; அமாவாசை மகன் ஹரிபாபு, 24; என்பதும், நண்பரின் திருமண விழாவிற்கு வரும் சக நண்பர்களுக்கு விருந்தளிக்க மதுபாட்டில்கள் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.மேலும், பிடிபட்டவர்ளிடமிருந்து ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.