விழுப்புரத்தில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் நகை திருட்டு

Update: 2025-01-18 04:13 GMT
விழுப்புரம், சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ., காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் அருள்லியோகிங்,47; விழுப்புரம் அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர். பொங்கல் விடுமுறை என்பதால், கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தோடு பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் ஜான்லியோகிங் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது.அதில் வைத்திருந்த 18 சவரன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்கள், ரூ.5,000 பணம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சமாகும்.விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, தடயவியல் நிபுணர்களை கொண்டு தடயங்களை சேகரித்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Similar News