கீழையூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாகப்பட்டினம் கீழையூரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-12-25 12:06 GMT

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று 100 நாள் வேலை திட்டம் முடக்கம் மற்றும் தேசதந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கம் செய்த மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக-வை கண்டித்து கீழையூர் ஒன்றியம் அலுவலகம் எதிரே மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மலர் வண்ணன், சிபில் மாநில விவசாய சங்க துணைத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் வெங்கட் ராமன், அப்துல் அஜீஸ், CPI மாவட்ட நிர்வாக குழு செல்வம், ஒன்றிய செயலாளர் மாசே துங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருட்செல்வன், ஒன்றிய செயலாளர் புஷ்ப ராஜ், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், மனதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் O.S.இப்ராகிம், துணை தலைவர் சர்புதீன், மனிதநேய ஜனநாயக கட்சி ஷாகுல் அமீது, முகம்மது ஜக்கிரியா, திமுகழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் SPT.சார்லஸ், ஞானசேகரன், இளம்பரிதி, நரசிம்மன், சுப்பிரமணியன், ரவிச்சந்திரன், வை.சண்முக சுந்தரம், அனுசியா, கோ.சி.குமார், சவுரி ராஜன்,குமார செல்வம், சார்பு அணி நிர்வாகிகள் முகம்மது ரபிக்,செல்வம், அன்புமணி, விஜய குமாரி, ஜோதிபாசு, ஒன்றிய இளைஞரணி புகழேந்திரன், நித்யா சந்திரசேகர் மற்றும் கிளை கழக செயலாளர்கள் , மகளீர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News