பைக் மீது கார் மோதல்.. ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்
கார் மோதல்.. ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மதுரா கொசப்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன்,33: கொத்தனார். இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தனது பைக்கில் தம்பி வடிவேலுவை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரே சாலையை கடக்க முயன்றார்.அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பாண்டியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வடிவேலு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.இது பற்றி விக்கிரவாண்டி போலீசில் பாண்டியன் மனைவி சுதா புகாரின் பேரில், கார் டிரைவர் சென்னை செம்பாக்கத்தை சேர்ந்த கண்ணன், 41: என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.