பொங்கலையோட்டி தர்மபுரியில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

தர்மபுரி பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2025-01-14 09:40 GMT
தருமபுரி மாவட்டத்தில்பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், தொப்பூர், கடத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்கின்றனர். இவர்கள் விளைவிக்கின்ற பூக்களை தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ மார்க்கெட் எடுத்து வந்து விற்பனை செய்வது வழக்கம்.பூ மார்க்கெட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவு பூசாகுபடி பாதிப்பு ஏற்பட்டது தற்பொழுது மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டிற்கு குறைந்துள்ளதால் விலை உயர்ந்து உள்ளது.பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, இன்று காலை தருமபுரி பேருந்து நிலையத்தில் செயல்படும் பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூ உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.1,500, கனகாம்பரம் ரூ,1000, சாமந்தி ரூ 200, சம்பங்கி ரூ.200, செண்டுமல்லி ரூ.60, கோழிக் கொண்டை ரூ.120, அரளி ரூ.300 என விற்பனை செய்யப்பட்டது.

Similar News