அல்லாள இளைய நாயக்கர் தொடர்பான செய்திகளை புத்தகமாக வெளியிட வேண்டும் -இளைய நாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்த சோமசுந்தரம் பட்டக்காரர் அரசுக்கு வேண்டுகோள்
ஜேடர்பாளையத்தில் அனைத்து வசதியுடன் கூடிய கலை அரங்கம் அமைத்து அதற்கு அல்லாள இளைய நாயக்கர் பெயர் சூட்ட வேண்டும் என்று இளைய நாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்த சோமசுந்தரம் பட்டக்காரர் அரசுக்கு வேண்டுகோள்!
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் ச.உமா மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில், மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் அவர்களின் பிறந்த நாளான தை திங்கள் 1-ஆம் நாள் அரசு விழாவை முன்னிட்டு, அவர்களது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பரம்பரையைச் சேர்ந்த, சோமசுந்தரம் பட்டக்காரர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.... சென்ற ஆட்சி காலத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு குவி மாடத்துடன் திருவருவ சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது ஆட்சி காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆட்சியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும், இந்தக் குவிமாடத்திற்கு மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும், இங்குள்ள அணை மற்றும் பூங்காவிற்கு அவரின் பெயரை சூட்ட வேண்டும். இக்குவி மாடத்தில் அவர் சார்ந்த கல்வெட்டுகளை பதிக்க வேண்டும். இப்பகுதியில் அனைத்து வசதியுடன் கூடிய கலை அரங்கம் அமைக்க வேண்டும்.பரமத்தியில் மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் அமைத்த வரலாற்று சிறப்புமிக்க மண் கோட்டையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டும்., தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும். அல்லாள இளைய நாயக்கர் தொடர்பான வரலாற்று கல்வெட்டுகள் மற்றும் செய்திகளை புத்தகமாக வெளியிட வேண்டும். அரசு நூலகங்களில் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியருக்கு மாமன்னர் அல்லாள இளைய நாயக்கர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் தெரிவித்தார்.