டிஎஸ்பி உடன் ரயில் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முதல் நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமாரை நேற்று ரயில் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து நலச்சங்கம் சார்பில் அச்சிடப்பட்டுள்ள காலண்டரை வழங்கினர். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.