பென்னி குயிக் பிறந்த நாள் கொண்டாட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கர்னல் பென்னி குயிக் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தென் மாவட்ட விவசாய மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184வது பிறந்த தினமான இன்று ( ஜன.15) விவசாயிகள் அனைவரும் அவரை போற்றி வணங்கினர். அதனடிப்படையில் மேலூர் அருகே வெள்ளலூரில் விவசாயிகள் மற்றும் மக்கள் சேவை மன்றம் இணைந்து அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.