கோவை: வீட்டு கதவுகளை திறக்க முயற்சிக்கும் யானை கூட்டம் !

வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் ஒரு வீட்டின் கதவைத் திறக்க முயன்ற யானையின் செயல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

Update: 2025-01-15 07:40 GMT
கோவை,மருதமலை, வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து வீடுகளைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இன்று அதிகாலை, வடவள்ளி ஐ.ஓ.பி காலனியில் ஒரு வீட்டின் கதவைத் திறக்க முயன்ற யானையின் செயல் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. வறட்சியின் காரணமாக உணவு தேடி வனப்பகுதியை விட்டு வரும் யானைகள், கிராமப்புறங்களில் பயிர்கள், கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் வீடுகளில் உள்ள உணவுப் பொருட்களைத் தேடி வருகின்றன. இதனால் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. வன உயிரின ஆர்வலர்கள், வனப்பகுதியைச் சுற்றி வேலி அமைத்து யானைகளை ஊருக்குள் வராமல் தடுப்பதுதான் தீர்வு என்கின்றனர். இதன் மூலம் வனவிலங்குகள் தங்களது இயற்கையான வாழ்விடத்தில் உணவு தேடி உயிர்வாழும். தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Similar News