குமரி - கேரளா எல்லைப் பகுதிகளில் வசிப்பவர்கள் பெயர், ஹாலோ பிளாக் கம்பெனி முகவரியில் போலீ பாஸ் போட்டு சோதனை சாவடி இல்லாத செங்கவிலை நாற்கர சாலை வழியாக கேரளாவுக்கு பாறைப்பொடி கடத்திச் செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கிடைத்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்ல சிவம் தலைமையிலான போலீசார் செங்கவிளை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு டாரஸ் லாரிகளை சோதனை செய்தபோது, ஊரம்பு பகுதிக்கு செல்வதாக போலி பாஸ் போட்டு வந்து கேரளாவுக்கு பாறைப்பொடியை கடத்தி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து கொல்லங்கோடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த சுஜித் (41), ராஜேஷ் (33) ஆகியோரை கைது செய்தனர். லாரியின் உரிமையாளர் கேரளா கொல்லம் பகுதி அசோகன் (70) என்பவரை தேடி வருகின்றனர்.