உப்பு பாளையம் பிரிவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
உப்பு பாளையம் பிரிவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
உப்பு பாளையம் பிரிவில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, குப்பம் அருகே உள்ள நொச்சிக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் வயது 50. இவர் ஜனவரி 13ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஈரோடு- கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் உப்பு பாளையம் பிரிவு அருகே வந்தபோது, எதிர் திசையில் கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு, மருத்துவ நகர் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் தமிழ்மணி வயது 25 என்பது வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் சேகர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் சேகருக்கு தலை, வலது கன்னம், உதடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்ச சம்பவம் தொடர்பாக சேகரின் மனைவி ரம்யா வயது 43 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தமிழ்மணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.