போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
13 கிலோமீட்டர் தூரம் நடந்தது
ஏபி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் பெண்ணாடம் லைன்ஸ் சங்கம் சார்பில் தமிழர் பொங்கல் திருநாளை முன்னிட்டும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விருத்தாசலத்தில் மூன்றாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் போட்டி வெண் கரும்பூர் பஸ் நிறுத்தம் வரை 13 கிலோமீட்டர் தூரம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.