திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

மாவட்ட வாழ்த்திய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்

Update: 2025-01-15 15:48 GMT
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்ச் சங்கம் சார்பில் சங்க மாவட்ட தலைவர் வை. தேனரசன் தலைமையில்‌, செயலாளர் இரா. சீனிவாச ராவ் முன்னிலையில் திருவள்ளுவர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தமிழறிஞர் வைகைமாலா, தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 10 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தமிழறிஞர் வைஜெயந்தி மாலா எழுதிய "தமிழ் மொழியில் கல்வி " என்ற நூலை வெளியீட்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தி.க. மாவட்ட தலைவர் தங்கராசு, மாவட்ட பொறுப்பாளர் அக்ரி ஆறுமுகம்,தலைமை ஆசிரியர் மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News