எம். பரூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

எம். பரூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-12-29 14:55 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எம். பரூர் துணை மின் நிலையத்தில் நாளை டிசம்பர் 30 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாசப்பரூர், எம். பட்டி, கோணாங்குப்பம், ரெட்டிகுப்பம், தொட்டிக்குப்பம், சின்னப்பரூர், விஜயமாநகரம், காட்டுப்பரூர், எடசித்தூர், மு. புதூர், வலசை, பிஞ்சனூர், இளங்கியனூர், சிறுவம்பார், டி. மாவிடந்தல், மு. அகரம் உள்ளிட்ட 16 கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என விருத்தாசலம் மின் வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.

Similar News