சமூக நல்லிணக்க சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனிதர்கள் மத்தியில் மத வேறுபாடுகள் இல்லை என்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
பெரம்பலூர் புனித பனிமயமாதா ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வில் பெரம்பலூரின் வட்டார முதன்மை குரு சுவக்கிஅடிகளார் தலைமையேற்று நடத்தினார் இதில் சிறப்பு விருந்தினர்களாக பெரம்பலூர் இஸ்லாமிய மாவட்ட ஹாஜி அப்துல் சலாம் சிவமணி சிவாச்சாரியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள் இந்த நிகழ்வில் பெரம்பலூர் பனிமயமாதா அன்பிய குழுக்கள் தனித்தனியாக பிரிந்து பொங்கல் வைத்து சிறப்பித்தார்கள் இந்நிகழ்வில் அனைவரும் தங்கள் வைத்த பொங்கலினை அனைவரும் பகிர்ந்து கொண்டனர் இதனையொட்டி சிறப்பு த் திருப்பலியும் சிறப்பு வழிபாடுகளும் நடை பெற்றன.