வேதாரண்யம் குருகுலத்தில் அமைந்துள்ள கோசாலையில்

மாட்டுப் பொங்கல் திருவிழா

Update: 2025-01-15 14:35 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் குருகுலத்தில் அமைந்துளை கோசாலையில், மாட்டுப் பொங்கல் திருவிழா நேற்று நடைபெற்றது விழாவையொட்டி, கோசாலையில் உள்ள நூற்றுக்கணக்கான மாடுகளை குளிப்பாட்டி, குருகுல வளாகத்தில் நெல், கதிர், தாழை கொண்டு அமைக்கப்பட்ட களத்துமேடு மாடுகளுக்கு, பூமாலை,|தேங்காய், கரும்பு, வாழை, பழம், வடை, ஆவராம்பூ சேர்த்து காட்டிய மாலை அணிவித்து, கோ பூஜை நடைபெற்றது. பின்னர், பொங்கல் இட்டு வழிபாடு நடந்தது, இசை வாத்தியங்கள் முழுங்க மாடுகளை மூன்று முறை வலம் வந்து, பொங்கலோ பொங்கலோ என கூறி மாடுகளுக்கு எண்ணெய் சீயக்காய் வைத்து, மஞ்சள் நீர் தெளித்து தீபாராதனை காண்பித்து கேமாதவை வழிபட்டனர். பின்னர் மாடுகளுக்கு பொங்கல் வழங்கபட்டது. பின்னர் மாடுகள் ஊர்வலமாக அழைத்து வரபட்டு, கேசாலையின் வாயிலில் பழங்காலத்து முறை படி உலக்கை போட்டு, தீ மூட்டி, மாடுகளை தாண்ட செய்து திருஷ்டி கழித்தனர். கோ பூஜையில், குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலை மணி வேதாரத்தினம், பெண்கள் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் கேடிலியப்பன் மற்றும் கதாகரன், குழலி, சித்திரலேகா, புவன் மற்றும் அலுவலர்களும், ஆசிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Similar News