அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா,அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு.

காவிரியில் தடுப்பணை அமைத்து ராசா வாய்க்கால் வெட்டிய மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாள் விழா தை 1 அரசு விழாவாக முதலாம் ஆண்டு ஜேடர்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Update: 2025-01-15 14:21 GMT
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் தை1 ( 14-01-2025 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்ற காவிரியில் தடுப்பணை அமைத்து ராசா வாய்க்கால் வெட்டிய மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் பிறந்தநாள் விழா தை 1 அரசு விழாவாக முதலாம் ஆண்டு ஜேடர்பாளையத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து அணைக்கட்டு பகுதியில் உள்ள மாமன்னர் அல்லாள இளைய நாயக்கரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் தமிழ்நாடு உதயநிதி ஸ்டாலின் சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் ,மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகரமைப்பு மண்டல திட்டகுழு உறுப்பினர் உயர்த்திரு எஸ்.எம் மதுரா செந்தில் அவர்களும்,திருச்செங்கோடு கோட்டாட்சியர், நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட அனைத்து நிர்வாகத்துறையினரும்கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் அல்லாள இளைய நாயகரின் ஏழாம் தலைமுறை வாரிசு சோமசுந்தர பட்டக்காரர் சார்பாகவும் , அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளை மற்றும் கொங்குநாடு வேட்டுவகவுண்டர் மடம் கபிலர்மலை சார்பாகவும் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சியின் எடுக்கும் அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் மற்றும் அனைத்து பொது மக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்

Similar News