மாட்டுப் பொங்கலை முன்னிட்டு
நந்தியம் பெருமானுக்கு காய்கறிகளால் அலங்கரித்து மகா
நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள வலிவலத்தில், அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், காய்கறிகளால் அலங்கரித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.