கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது
நத்தம் அருகே விற்பனைக்காக கள்ளத்தனமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 672 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுகுடி புதுப்பட்டி பகுதியில் கள்ளத்தனமாக விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பொன்னையா மகன் செல்வராஜ்(53) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 672 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.