பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு
புத்தாடைகள் - வீட்டு உபயோக பொருள்கள் அளித்து கௌரவம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அன்பு தான் கடவுள் அறக்கட்டளை சார்பில், சிவகங்கையை சேர்ந்த நினைவில் வாழும் திருவாளர் செல்லமுத்து அவர்கள் நினைவாக, ஜேம்ஸ் மற்றும் அருமைநாதன் அவரது குடும்ப உறவுகள் இணைந்து, நாகை மாவட்டம் குறிச்சி ஊராட்சியில், தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை காவலர்களுக்கு, பொங்கல் தினத்தை முன்னிட்டு, ஒரு மாதத்திற்கான மளிகை பொருள் புத்தாடைகள் போர்வை மற்றும் பக்கெட் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், அன்பு தான் கடவுள் அறக்கட்டளையின் தலைவர் பீட்டர் ராஜ், செயலாளர் பெனோ, பொருளாளர் சாமிநாதன், துணைத் தலைவர் டேவிட், அறங்காவலர்கள், ஊராட்சி செயலர்கள், மற்றும் குறிச்சி ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.