சமத்துவ பொங்கல் விழா பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கல்.

தூத்துக்குடி சென்னையைச் சேர்ந்த டெக் டியூ சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் பண்டாரம் பட்டி பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ஐந்தாவது ஆண்டாக பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் சிக்கன் பிரியாணி இனிப்பு வழங்கப்பட்டது

Update: 2025-01-15 10:38 GMT
தூத்துக்குடி சென்னையைச் சேர்ந்த டெக் டியூ சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் பண்டாரம் பட்டி பகுதியில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு ஐந்தாவது ஆண்டாக பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் சிக்கன் பிரியாணி இனிப்பு வழங்கப்பட்டது தூத்துக்குடி பண்டாரம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் த,ஆறுமுக பாண்டி இவர் சென்னை மற்றும் தூத்துக்குடியில் டெக் டியூ என்ற பெயரில் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருகிறார். ஐந்தாவது ஆண்டாக டெக்டியூ சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் இன்று பண்டாரம் பட்டி கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஜாதி மத வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்றாக இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடும் வகையிலும் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் அனைவருக்கும் சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில கிருஷ்ணமூர்த்தி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் கார்த்திகேயன், சிவா டார்தின் , பிரபு கலைச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் டெக்டியூ சாப்ட்வேர் நிறுவன உரிமையாளர் ஆறுமுக பாண்டிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர் இதை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். முன்னதாக தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்க மாநில கிருஷ்ணமூர்த்தி, பேசும்போது மாணவ மாணவிகள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் கல்விக்கான எந்த உதவி எப்போது கேட்டாலும் தாங்கள் செய்ய முன்வரும் என தெரிவித்தார். மேலும் இந்த நிறுவனம் தூத்துக்குடியில் நம்ம பகுதியில் தொடங்கப்பட உள்ளது. அப்பொழுது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Similar News