கோசாலையில் மாடுகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாட்டம்.
தூத்துக்குடி மாட்டுப்பொங்கலை ஒட்டி நாட்டின பசுக்கள் வளர்க்கப்படும் கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாட்டம்.
இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தூத்துக்குடியில் அமைந்துள்ள நாட்டின பசுக்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வரும் சங்கர் கோசாலையில் கோமாதா சேவா டிரஸ்ட் சார்பில் மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டது இந்த கோசாலையில் காங்கேயம், தென்பாண்டி நாடு, கிர், ஓங்கல், காங்கிரிட்ஜ் உள்ளிட்ட 12 வகையான சுமார் 70-க்கும் மேற்பட்ட நாட்டின பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது மாட்டுப் பொங்கலை முன்னிட்டு இன்று நாட்டின பசுக்களை காலையில் குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் ஆகியவை பூசி புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு கிருஷ்ணர் ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் மாடுகளுக்கு பிடித்த பொங்கல் வாழைப்பழம் அகத்திக்கீரை ஆகியவை வழங்கப்பட்டது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உழவர்களின் நண்பனான மாடுகளை மலர் தூவி வழிபட்டனர்.