குளச்சல் :  ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர்

வழக்கு

Update: 2025-01-15 10:42 GMT
குமரி மாவட்டம் குளச்சல் அருகே நாராயண நகரை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சங்கர் (34). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவ தினம் வீட்டுக்கு தேவையான சிமெண்ட் கற்களை அப்பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டில் இறக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சங்கருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார், குமார் மற்றும் ராஜகுமாரின் உறவினர் ஒருவருக்குமிடைய முன் விரோதம் ஏற்பட்டது.         இந்த நிலையில் நேற்று ஷங்கரின் அண்ணன் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த ராஜ்குமார், குமார் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் சங்கரின் அண்ணனை தாக்கியுள்ளனர். அப்போது இதனை தடுக்க வந்த சங்கரும் தாக்கப்பட்டார்.        இதில் காயமடைந்த இருவரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இது குறித்து சங்கர் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் ராஜ்குமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News