கோவை: செட்டாப் பாக்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் !

பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் துவங்கப்பட்டது

Update: 2025-01-15 10:47 GMT
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திட்டத்தின்படி 50 லட்சம் HD செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் துவங்கப்பட்டது. கோவை மாநகர காவல் ஆணையாளர் எ.சரவணசுந்தர் நேற்று இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலான்மை இயக்குனர் டாக்டர் ஆர்.வைத்தியநாதன் இ.ஆ.ப., கேபிள் டிவி நலவாரிய தலைவர் ஜீவா ஆகியோர் இந்த திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகின்றனர். இந்த விழாவில், கேபிள் டிவி தனி வட்டாட்சியர் தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் முதன்முறையாக கோவை மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News