கார், டிராக்டர் பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள்.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்று கார், டிராக்டர் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜன.15) காலை உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணியில் சுமார் 2500 போலீசார் இருந்தனர். போட்டியில் கலந்து கொண்டு வென்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதி சுற்று நடந்த பிறகு 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் முதலிடத்தை பிடித்துள்ளார். மஞ்சம்பட்டியைச் சேர்ந்த துளசி என்பவர், 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 11 காளைகளை அடக்கி பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் பார்த்தீபனுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தைப் பிடித்த துளசிக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. முதல் இடத்தை காளையின் உரிமையாள விஜய் தங்கபாண்டிக்கு முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசோதனை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜனும் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.