கிள்ளியூர்: அரசின் இலவச கரும்பை விற்க முயற்சி

புகார்

Update: 2025-01-15 10:30 GMT
குமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகா பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 10 -க்கும் மேற்பட்ட கரும்பு கட்டுகளை நேற்று  காலை ரேஷன் கடை விற்பனையாளர் ஒருவர் கரும்பு ஜூஸ் கடை வியாபாரி மற்றும் வேறு சிலரை அழைத்து வந்து விற்பனைக்கு கொண்டு செல்வதாக புகார் எழுந்தது.        இந்த தகவல் அறிந்ததும் பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதை அடுத்து கரும்பு ஜூஸ் வியாபாரி அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஊர் பொதுமக்கள் கூறுகையில்;- இந்த ரேஷன் கடை விற்பனையாளர் சரியான முறையில் பொருட்கள் வழங்குவதில்லை. எடை மெஷின் மக்களுக்கு தெரிவது போல் வைக்காமல்  ஒதுக்குப்புறமாக வைத்து எடை போடுகிறார்.        இது தொடர்பாக புகார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளை போனில் அழைத்தால் அவர்கள் போனை எடுப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது. ஆகவே வியாபாரிக்கு மொத்தமாக விற்பனை செய்த ரேஷன் கடை விற்பனையாளர், கிள்ளியூர் வட்ட வழங்க அலுவலர் ஆகியோர் மீது மாவட்ட ஆட்சி தலைவர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Similar News