பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா
பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கொம்புகள் பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, சலங்கை கட்டி பொங்கல் ஊட்டப்பட்டது. பின்னர் 1000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல், கரும்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா, பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டு பொங்கல் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சீ.கதிரவன், செயலர் பி.நீலராஜ் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக இணை வேந்தர் அனந்த லட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் நிவானி கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாட்டுப்பண்ணையில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சுவாமிக்கு பூஜை செய்யப்பட்டு அங்கிருந்த 150க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு கொம்புகள் பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, சலங்கை கட்டி பொங்கல் ஊட்டப்பட்டது. பின்னர் 1000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல், கரும்புகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பொங்கல் திருநாள் அனைவருக்கும் உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். “கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வில் வளத்தை கொண்டு வந்து சேர்க்கட்டும்” என்று பொங்கல் வாழ்த்துக்களை வேந்தர் அவர்கள் தெரிவித்து கொண்டார்.