ஓரிக்கையில் சாலை சேதம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சின்னய்யங்குளம் காலனிக்கு செல்லும் பிரதான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையில், ஓரிக்கை பாலாறு மேம்பாலத்திற்கு செல்லும் சின்னய்யங்குளம் சாலை உள்ளது. இச்சாலை வழியாக அண்ணா குடியிருப்பு, தாண்டராயன் நகர், ஓரிக்கை பழைய காலனி, திருவேகம்பன் நகர், அரசு பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், ஓரிக்கை அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி அருகே, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலை குண்டும் குழியுமாக, புழுதி பறந்து வருகிறது. இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. மழைக்காலத்தில் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் குளம்போல தேங்குகிறது. இதனால், பள்ளி செல்லும் மாணவ - -மாணவியர் மட்டுமின்றி, இருசக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சேதமடைந்த சின்னய்யங்குளம் காலனிக்கு செல்லும் பிரதான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.