திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள திருநகர் காலனி என்ற பகுதியில் காலி செய்யப்பட்ட காயலான் கடையில் திடீர் தீ விபத்து
திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள திருநகர் காலனி என்ற பகுதியில் காலி செய்யப்பட்ட காயலான் கடையில் இருந்த டயர்கள் தீப்பிடித்து எரிந்தது அருகில் இருந்தஹோட்டல் கடை மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடைகளுக்குள் புகை சூழ்ந்தது தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்;
திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் திருநகர் காலனி பகுதியில்பால்காரர் என்கிற வெங்கடாசலத்திற்கு சொந்தமான காலி இடத்தில் ஈரோட்டை சேர்ந்த விவேக் என்பவர் காயலான் கடை வைத்திருந்தார் அங்கு பழைய டயர்கள் பிளாஸ்டிக் குழாய்கள் இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அவர் கடையை காலி செய்து விட்டார் ஆனாலும் கடையில் இருந்த பழைய பொருட்களை எடுத்துச் செல்லாமல் இருந்தார்.அதனை முழுமையாக காலி செய்து வரவு செலவு செட்டில் செய்த பிறகு தான் வாகனங்களை திருப்பி தர முடியும் எனக்கூறி இடத்தின் உரிமையாளர் வெங்கடாசலம் விவேக் இன் இரண்டு 407 வாகனங்களை வீட்டிலேயே கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்து உள்ளார் இந்த நிலையில் இன்று மாலை திடீரென டயர்கள் இருந்த பகுதி தீப்பிடித்து எறிய தொடங்கியது பழைய டயர் பிளாஸ்டிக் பொருள்கள் எறிந்ததால் கரும்புகை சூழ்ந்தது ரோட்டில் சென்ற அக்கம்பக்கத்தினர் பார்த்து இடத்தின் உரிமையாளர் மற்றும் தீப்பிடித்து இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த ஓட்டல் கடை உரிமையாளர் ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர் மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர்நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையில் விரைந்து வந்துசுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.பக்கத்து கடைக்காரர்கள் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வரைந்து வந்து ஹோட்டல் கடைகளுக்கு இருந்தநான்கு கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினார்கள் அதற்காக ஸ்பேர் பார்ட்ஸ் கடைக்காரரும் ஹோட்டல் கடைக்காரரும் கதவை திறந்த போது கடைக்குள் கரும்புகை சூழ்ந்து இருந்துள்ளது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டல் விடுமுறையாக இருந்துள்ளது இதனால் பெரிய அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.தீ விபத்து எப்படி ஏற்பட்டது? யாராவது வேண்டுமென்றே தீ வைத்தார்களா என்பது குறித்தும் சம்பவம் குறித்தும் திருச்செங்கோடு நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்