சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை குழுவினர் சார்பில் மருத்துவ முகாம்
சுற்று வட்டார பொது மக்கள் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது;
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 ஏ நத்தம் பண்ணை மாநகரப் பகுதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை குழுவினர் மற்றும் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து புனித அந்தோணியார் டெல்லி பப்ளிக் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பதினைந்துக்கும் மேற்பட்ட பிரபல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களின் எண்ணிக்கை 125 ஆகும். இதில் திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குயில் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த முகாமில் எஸ் ஆர் எம் மருத்துவத் துறையினரோடு , சமூக மாற்றத்தின் விதை அறக்கட்டளை குழுவின் நிறுவனர் தீபாபிரபு, ஆலோசகர் -ராஜா தலைவர் அருண்குமார், துணைத் தலைவர் நித்யா, பொருளாளர் மதிவாணன், செல்வராஜ், ராசாத்திரஞ்சித், யோகா, சசிரேகா முகமது கனி, பாலு, சார்லஸ், எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முகாம் இயக்குனர் பூங்கோதை மற்றும் மருத்துவத் துறையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் சதாம் உசேன், புனித அந்தோனியார் டெல்லி பப்ளிக் பள்ளி இயக்குனர், முதல்வர், மற்றும் ஆசிரிய பெருமக்களும், மற்றும் ஏராளமான ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.