கோவை: தை முதல் வாரத்தில் மக்காச்சோள விதைப்பு !
கோடை கால மக்காச்சோள சாகுபடியை தை மாத முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என வேளாண் பல்கலைக்கழக சிறுதானியங்கள் துறைத் தலைவர் சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
கோடை கால மக்காச்சோள சாகுபடியை தை மாத முதல் வாரத்துக்குள் முடிக்க வேண்டும் என வேளாண் பல்கலைக்கழக சிறுதானியங்கள் துறைத் தலைவர் சிவகுமார் இன்று அறிவுறுத்தியுள்ளார். இது அவர் கூறுகையில், தை மாதம் 3, 4 வாரங்களில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பத்தால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். எனவே, 100-105 நாட்கள் கொண்ட குறைந்த வயதுடைய நல்ல வீரிய ஒட்டு ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்றார். நேரடி நீர்ப்பாசன முறையில் பாத்தி, பார் அமைத்து வரிசைக்கு வரி 60 செ.மீ., மற்றும் செடிக்கு செடி 25 செ.மீ., என்ற அளவில் நடவு செய்ய வேண்டும். நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் அமைத்து இரட்டை வரிசை முறையில் நடவு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.