எம்பி தலைமையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து விலகி தர்மபுரி எம்பி தலைமையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம், கொட்டாவூர் மற்றும் திண்டல் பகுதியிலிருந்து அதிமுக & பாமகவில் இருந்து ஏராளமானூர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் இன்று ஜனவரி 15 நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் கோபால் அன்பழகன் முன்னிலை வகித்தனர். முன்னாள் தலைவர் கௌரி திருக்குமரன் வரவேற்றார். முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வசந்தன் முன்னாள் அதிமுக கவுன்சிலர் சின்னசாமி ஆகிய 50க்கும் மேற்பட்டோர் தர்மபுரி எம்பி ஆ.மணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.