விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, நமது விருதுநகரில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் உணவு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், இந்த உணவுத் திருவிழாவில், உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் யூ - டியூப் பிரபலங்கள், சூப்பர் சிங்கர்ஸ் இசை நிகழ்ச்சி,திருவனந்தபுரம் ML ராஜாவின் கீதாஞ்சலி இன்னிசைக் குழு இசை நிகழ்ச்சி, மதுரை மேஸ்ட்ரோ சைமன் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பரத நாட்டியம், சிலம்பம், நடனம், யோகா, உள்ளிட்டவை நடைபெற உள்ளது.