வத்திராயிருப்பு அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்....*

வத்திராயிருப்பு அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்....*

Update: 2025-01-15 06:59 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாட்டுப்பொங்கலை முன்னிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள்.... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அவைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இன்று மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகளில் வளர்க்கப்படும் காளைகள் மற்றும் பசு மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.  அதன் அடிப்படையில் வத்திராயிருப்பு அருகே  கூமாப்பட்டி  பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகள் அலங்கரிக்கப்பட்டு  மேளதாளங்களுடன் ஊர்வலமாக  வரப்பட்டன. தொடர்ந்து உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகள் மற்றும் பால் மாடுகளுக்கு அதனின் உரிமையாளர்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.

Similar News