இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.... அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய உறவினர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.... அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய உறவினர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.... அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய உறவினர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்காசி சாலையில் உள்ள மங்காபுரத்தை சேர்ந்த கருப்பசாமி 30, என்ற இளைஞர் அதே பகுதியான மாரியம்மன் கோவில் பூக்குழி திடலில் மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இளைஞர் கருப்பசாமியை மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் தென்காசி சாலைய மங்காபுரம் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மதுரை தென்காசி சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்ததை நடத்தியபோது காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால். இதை அடுத்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர் மேலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 50க்கும் மேற்ப்பட்டோரை காவல் துறையினர் கைது. செய்தனர் இதனால் அப்குதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.