விவசாயிகள் பயனடைந்திட ஏதுவாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது

விவசாயிகள் பயனடைந்திட ஏதுவாக வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்ஜெயசீலன் தகவல்.

Update: 2025-01-14 15:05 GMT
விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் 22.01.2025 முதல் 01.02.2025 முடிய காலை 9.00 மு.ப. முதல் 1.00 பிப வரை நடைபெற உள்ளது. இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளது. திருவில்லிபுத்தூர் வட்டாரம் சார்பாக 22.01.2025 அன்று வி.பி.எம்.எம் கலை கல்லூரி வளாகத்திலும், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரம் சார்பாக 23.01.2025 அன்று அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், வத்திராயிருப்பு வட்டாரம் சார்பாக 24.01.2025 அன்று கலசலிங்கம் பல்கலைகழக வளாகத்திலும், அருப்புக்கோட்டை வட்டாரம் சார்பாக 25.01.2025 அன்று தேவாங்கர் கலை கல்லூரி வாளகத்திலும், சாத்தூர் வட்டாரம் சார்பாக 27.01.2025 அன்று கிருஷ்ணசாமி நாயுடு கல்லூரி வளாகத்திலும், விருதுநகர் வட்டாரம் சார்பாக 28.01.2025 அன்று ஸ்ரீவித்யா கல்லூரி வளாகத்திலும், காரியாபட்டி வட்டாரம் சார்பாக 29.01.2025 அன்று சேது டெக்னாலஜி இன்ஸ்டியூட் வளாகத்திலும், திருச்சுழி வட்டாரம் சார்பாக 30.01.2025 அன்று என்.எம்.வி. இன்ஸ்டியூட் ஆக் அக்ரி அண்ட் டெக்னாலஜி கல்லூரி வளாகத்திலும், நரிக்குடி வட்டாரம் சார்பாக 31.01.2025 அன்று திருச்சுழி, அரசு கலை கல்லூரி வளாகத்திலும், இராஜபாளையம் வட்டாரம் சார்வாக 01.02.2025 அன்று இராஜுஸ் கல்லூரி வாளகத்திலும் நடைபெற உள்ளது. இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது. அனைத்து வட்டார விவசாயிகளும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்று கொள்ளலாம். அனைத்து வட்டார விவசாயிகளும் பயனடைந்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Similar News