2026-ல் திமுக அணி 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல உறுதியேற்போம்- உதயநிதி ஸ்டாலின்
நம் பெருமைமிகு தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 2026-ல் 200-க்கும் அதிகமான இடங்களில் திமுக அணி வெல்ல தமிழர் திருநாளில் உறுதியேற்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பொங்கல் பண்டிகை வாழ்த்துச் செய்தியில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் நம் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். சாதி, மதம் கடந்து அனைவராலும் கொண்டாடப்படுகிற இச்சமத்துவப் பெருவிழாவை போற்றுவோம். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களால் உயர்ந்து நிற்கும் தமிழகம், இந்திய ஒன்றியத்தில் சமத்துவமும், ஜனநாயகமும் காக்கும் வாடிவாசல் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வோம். நம் பெருமைமிகு தமிழகத்தின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல 2026-ல் 200-க்கும் அதிகமான இடங்களில் திமுக அணி வெல்ல தமிழர் திருநாளில் உறுதியேற்போம் என்று அவர் கூறியுள்ளார்.